சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.
சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)
சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.
உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்
முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுலள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.
பகவான் கிருஷ்ணன் முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த அவருக்கு சுடிதார் மூலம் முழுவது மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன
பெண்ணியியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன
அன்புடன்
அரவிந்தன்
2 Comments:
எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன் திருவடி அடைந்தார்.
அவரது கதைகளில் என்றென்றும் நடமாடவிருக்கும் பெங்களூரில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடக்கவுள்ளது.
தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6
இடம்: பெங்களூர் கப்பன் பார்க் (ராணி விக்டோரியா சிலையின் இடதுபக்கத்துப் பார்க்கில். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு நேர் எதிரில்.)
மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768
March 9, 2008 at 8:57 PM
சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம் - இடமாற்றம்.
ஐயா, பெங்களூர்வாசியான தாங்கள் இந்தக் கூட்டத்திற்கு வருகை தாருங்கள். தங்கள் தமிழ் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். நன்றி.
சுஜாதாவின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழ்சங்கத்தில் நடைபெறுவதாக உள்ளது. முன்னர் கப்பன் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது பெங்களூர் தமிழ்சங்கத்தில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவருடன் நெருங்கிப் பழகிய பார்த்தசாரதி சபா திரு கிருஷ்ணன், பேராசிரியர் திரு ராமமூர்த்தி, எழுத்தாளர் திரு அமுதவன், ஆய்வுக்கூடத்தின் சேர்மன் டாக்டர் முரளிரங்கன் ஆகியோர் அன்னாருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
பெங்களூர் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு ஷண்முக சுந்தரம் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6
இடம்: பெங்களூர் தமிழ் சங்கம், (அல்சூர் ஏரியைச் சுற்றியுள்ள சாலை, RBANMS கல்லூரி அருகில்)
மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768
March 15, 2008 at 1:25 PM
Post a Comment
<< Home